இன்ட்கோசர்வ் என்பது இந்தியாவின் மிகப்பெரிய தேயிலை கூட்டுறவு கூட்டமைப்பு ஆகும், இது சுமார் 30,000 சிறு தேயிலை விவசாயிகளுடன் பணிபுரிகிறது, ஆண்டுக்கு சுமார் 13 மில்லியன் கிலோ தேயிலைத்தூள் உற்பத்தி செய்கிறது. இன்ட்கோசர்வ், மதிப்புச் சங்கிலி 16 தேயிலை தொழிற்சாலைகளுக்கு மேல் பரவியுள்ளது மற்றும் அதன் உறுப்பினர் உற்பத்தியாளர்களிடமிருந்து பசுந்தேயிலைகளை நேரடியாக சென்று கொள்முதல் செய்தல், தேயிலைத்தூள் உற்பத்தி செய்தல், விநியோகம் மற்றும் வர்த்தக நடவடிக்கைகள் மேற்கொள்ளுதல் ஆகியவை அடங்கியதாகும்.
அமைப்பு
1965 ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் அமைக்கப்பட்ட இன்ட்கோசர்வ், ஆனது நீலகிரி மாவட்டத்தில் உள்ள சிறு தேயிலை விவசாயிகளின் வாழ்வாதாரம் முன்னேற ஒரு ஊக்கியாக செயல்பட்டு தேவையான பாதுகாப்பை வழங்குகிறது. இண்ட்கோசர்வின் செயல்எல்லை நாடு முழுவதும் உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் "மவுண்டன் ரோஸ் டீ (Leaf மற்றும் Dust தரங்கள்)", "புளூமாண்ட் டீ (பிரீமியம் டஸ்ட்)" மற்றும் "ஊட்டி டீ" ஆகியவை தமிழக அரசாங்கத்தின் பொது விநியோக முறையின் கீழ் "நியாய விலைக் கடைகள்" மூலம் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
பார்வை
சிறந்த தேயிலை உற்பத்தியில் இந்தியாவின் மிகச்சிறந்த நிறுவனமாக மாற வேண்டும்.
பணி
இன்ட்கோசர்வ்-ன் முன்னேற்றத்தில் சிறு தேயிலை விவசாயிகளை சம பங்குதாரர்களாக மேம்படுத்துதல்.
செயல்பாட்டின் பகுதி
சிறந்த தரமான தேயிலைத்தூள் உற்பத்தி (மொத்தம் மற்றும் சில்லறை விற்பனை),
தேயிலை சேமிப்பு கிடங்கு வசதிகள் ஏற்படுத்துதல்,
தேயிலைத்தூள் சில்லறை விற்பனையை, பொது விநியோகத் திட்டம் மற்றும் திறந்தவெளி சந்தை ஆகியவற்றில் அறிமுகப்படுத்தி செயல்படுத்துதல்,
தொழிற்கூட்டுறவு தேயிலைத் தொழிற்சாலைகளின் வாயிலாக சிறு தேயிலை விவசாயிகளுக்கு வேளாண் இடுபொருட்கள் விநியோகம் செய்தல்,
தேயிலை சாகுபடியில் நவீன உத்திகளை கையாளுவதில் விவசாயிகளுக்கு அறிவுரை வழங்குதல் மற்றும் தேயிலைத்தூள் பேக்கிங் பொருட்கள் வழங்குதல் போன்ற செயல்பாடுகள் இண்ட்கோசர்வ்-ன் முக்கிய நோக்கமாகும்.
சிறு தேயிலை விவசாயிகளுக்கு நிலையான வாழ்வாதார வாய்ப்புகளை வழங்குவதற்காக, "இலக்கை நோக்கி செயலாற்றுதல்" என்ற நோக்கத்துடன், இன்ட்கோசர்வ், நிலையான வணிகச் சூழலை உருவாக்க முயன்று வருகிறது. இந்திய அரசின் உணவு பதப்படுத்தும் தொழில்துறை அமைச்சகத்தின் ஆண்டு அறிக்கையின்படி, உலகில் தேயிலை உற்பத்தியில் சீனாவுக்கு அடுத்தபடியாக இந்தியா 2வது இடத்தில் உள்ளது. உலகில் உற்பத்தி செய்யப்படும் மொத்த தேயிலையில் இந்தியா 22% உற்பத்தி செய்கிறது. இந்திய தேயிலை வாரியத்தின் சமீபத்திய தரவுகளின்படி, தேயிலையின் உள்நாட்டு நுகர்வு 2017 இல் 1,059 மில்லியன் கிலோவிலிருந்து 1,084 மில்லியன் கிலோ என்ற மிக உயர்ந்த அளவை எட்டியுள்ளது. இந்த 25 மில்லியன் கிலோ அதிகரிப்பு 2.36% நிலையான வளர்ச்சியைக் குறிக்கிறது. தேயிலைத்தூளின் உள்ளூர் நுகர்வு மிகவும் வலுவான மற்றும் நிலையான சந்தை உள்ளது என்பதை தரவுகள் நிரூபிக்கின்றன. இன்ட்கோசர்வ், சிறு தேயிலை விவசாயிகளின் வாழ்வாதார வாய்ப்புகளை உயர்த்தும் அதே வேளையில் தேயிலைத் தூள்களை வெற்றிகரமாக சந்தைப்படுத்தி இந்த வாய்ப்பைப் பயன்படுத்தவும் விரும்புகிறது.