கோவிட்-19 காரணமாக விதிக்கப்பட்ட பொது ஊரடங்கு காரணமாக தேயிலத் துறை சவாலான மிகப்பெரும் காலங்களை கடந்துள்ளது. கோவிட் 19 காரணமாக தேயிலை துறையில் எழுந்த சில சவால்களான பயிர் இழப்பு காரணமாக நேரடி பொருளாதார இழப்பு; தொழிலாளர்களின் நடமாட்டத்தின் மீதான கட்டுப்பாடு, பயிர்ச்செய்கைக்கு, குறிப்பாகப் சாகுபடி செய்வதற்கு, தொழிலாளர் பற்றாக்குறையை வழிவகுத்தது; முடக்குதலுக்குப் பிறகு மற்றும் தொழிற்சாலையில் செலவினங்களை மறுசீரமைப்பு செய்தல்; விநியோகச் சங்கிலியை ஒழுங்குபடுத்துவதில் தாமதம்; ஊதியம் உள்ளிட்ட செயல்பாடுகளுக்கு ஏற்பட்ட நிதிச்சுமை; கிடங்குகளில் விற்பனையாகாத தேயிலை தேக்கநிலை, வர்த்தகத்தில் ஏற்பட்ட பாதிப்பால் ஏற்றுமதி நடைபெறாதது மற்றும் விநியோகச் சங்கிலி சீர்குலைந்ததால் பெரும்பாலான துறைமுகங்களுக்குச் போக்குவரத்து செயல்படாமல் இருந்தது போன்ற சவால்களை சந்தித்துள்ளது.
கோவிட்-19 மற்றும் இன்ட்கோசர்வ்
இருப்பினும், தமிழக அரசின் ஆக்கப்பூர்வமான கொள்கைகள் காரணமாக, INDCOSERVE தனது செயல்பாடுகளை தொடர்ந்து ஒழுங்குமுறைப்படுத்தி தமிழ்நாடு அரசின் அனுமதியைப் பெற்ற பிறகு, முடக்கபட்ட ஒரு வாரத்திற்குள் அனைத்து இண்ட்கோ தொழிற்சாலைகளிலும் உற்பத்தியினை மீண்டும் தொடங்க முடிந்ததால், INDCOSERVE கோவிட் 19 கட்டுப்பாடுகளை திறம்பட கையாண்டு தொழிற்சாலைகளில் அதன் பணியாளர்களின் பாதுகாப்பிற்கான அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் பின்பற்றி சவாலை வெற்றிகரமாக கையாண்டது. கோவிட் பேரிடரின் போது INDCOSERVE கேரள மாநில அரசின் பேரிடர் நிவாரணப் பொருட்களில் தேயிலைத்தூளை ஒரு பகுதியாக வழங்கியதன் வாயிலாக இண்ட்கோசர்வின் தயாரிப்பான மவுண்டன் ரோஸ் (250 கிரோம் பாக்கெட்டுகள்) தேயிலைத்தூள் 1,250 மெட்ரிக் டன் தேயிலைத்தள் கேரள அரசின் சிவில் சப்ளைஸ் துறைக்கு வழங்குவதற்கான மதிப்புமிக்க வர்த்தகத்தை பெற முடிந்தது. மேலும் இந்த வர்த்தகத்தை சிறந்த செயலாற்ற முறைகளை கையாண்டு 21 நாட்களில் நல்ல தரமான தேயிலை மிகவும் குறுகிய காலகட்டத்தில் விநியோகம் முடிந்தது. இது INDCOSERVE-க்கு மேலும் பெருமையை சேர்த்து, சிறு தேயிலை விவசாயிகளுக்கு பொருளாதார நன்மையையும் கொண்டு வந்துள்ளது.